

சென்னையில் இரண்டாம் நிலை காவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கான ஆணை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராஜரத்தினம் மைதானத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.