Chennai | Police | கொடூர நிலையில் பெண் சடலம்.. சிக்கிய நபர்.. சென்னையில் அதிர்ச்சி
கொடூர நிலையில் பெண் சடலம்.. சிக்கிய நபர்.. சென்னையில் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் ஏரிக்கரையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையில், உயிரிழந்தவர் கோயம்பேடு பகுதியை சேர்ந்த 50 வயதான ராதா என தெரியவந்தது. ராதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் கடந்த ஓராண்டாக தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஏரிக்கரையில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், சுரேஷ் பீர் பாட்டிலால் தாக்கியதில் ராதா உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் தலைமறைவான சுரேஷை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
