

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பானுமதி. இவரது கணவர் இரவு வேலைக்கு சென்ற நிலையில், அதிகால 03:00மணிக்கு பானுமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் தானே நடந்து ஆட்டோ பிடிப்பதற்காக சூளைமேடு நெடுஞ்சாலைக்கு வந்துள்ளார். ஆனால் அப்போது பனிக்குடம் உடைந்ததால் நிலை தடுமாறி பானுமதி சாலையில் கீழேவிழுந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சித்ரா குப்பை சேகரிக்கும் மூதாட்டியும் கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்தனர். ஆண் குழந்தை பிறந்த பிறகு ஆம்புலன்ஸ் வரவழைத்து பானுமதியையும் குழந்தையையும் காவல் ஆய்வாளர் அனுப்பி வைத்தார்.