Chennai | Police | ஒரு இடம் விடாமல் இறங்கி அலசி எடுக்கும் போலீஸ்.. சென்னையில் 16 பேர் அதிரடி கைது

Chennai | Police | ஒரு இடம் விடாமல் இறங்கி அலசி எடுக்கும் போலீஸ்.. சென்னையில் 16 பேர் அதிரடி கைது

Chennai | Police | ஒரு இடம் விடாமல் இறங்கி அலசி எடுக்கும் போலீஸ்.. சென்னையில் 16 பேர் அதிரடி கைது

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், விதிகளை மீறி மது விற்பனை செய்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக, வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 439 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். இதேபோல் திருவொற்றியூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற 8 பேர் பிடிபட்டனர். கொண்டித்தோப்பு மற்றும் பிராட்வே பகுதிகளில் விதிகளை மீறிய பார்கள் உடனடியாக மூடப்பட்டன. புதுவண்ணாரப்பேட்டையில் 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நுங்கம்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் இயங்கிய தனியார் பார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 12 காவல் மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட இந்த சோதனையில் மொத்தம் 487 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக இந்த அதிரடி வேட்டை தொடரும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com