Chennai Police | சென்னை காவல் துறையில் பல அதிரடி மாற்றங்கள்
சென்னையில் 20 காவல் ஆய்வாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்
சென்னையில் 20 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் அருண் பிறப்பித்துள்ளார்.அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவகுமார், மடிப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரஜினிஷ், திருவல்லிக்கேணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் முருகானந்தம், மீன்பிடித் துறைமுகம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும், காசிமேடு சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் வசந்த ராஜா, புழலுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல் புழல் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் சரவணன், துரைப்பாக்கம் குற்றப்பிரிவுக்கும், அண்ணா சாலை சட்டம்–ஒழுங்கு ஆய்வாளர் மோகன்தாஸ், திருவொற்றியூர் குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், பட்டினம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராகவும், திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் ராஜேந்திரன், எழும்பூர் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பூக்கடை போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் ராஜேஸ்வரி, அண்ணா சாலை சட்டம்-ஒழுங்கு ஆய்வாளராகவும், கீழ்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் சுகுணா, கோடம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
