

சென்னை ஆதம்பாக்கத்தில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய வழக்கறிஞர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு கரிகாலன் தெருவில் சண்டையிட்ட மூவரை போலீசார் விலக்க முயன்றுள்ளனர். அவர்கள் ஏட்டு அங்கமுத்துவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து மூவரையும் பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வழக்கறிஞர்கள் என்பதும், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.