மேசையில் துணியை கட்டி போராடிய சென்னை மக்கள் - வைரலாக பரபரப்பு வீடியோ
பள்ளத்தில் சிக்கிய இளைஞர் துணி கட்டி மீட்பு
சென்னை அம்பத்தூரில் பள்ளத்தில் சிக்கிய இளைஞரை மேசையில் துணி கட்டி தூக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அம்பத்தூர் கருக்கு சாலையில் நேற்று முன்தினம் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டு, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மற்றும் அவரை தொடர்ந்து வந்த லாரி சிக்கியது. இதில் இளைஞர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கிரேன் மூலம் லாரியும் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராட்சத பள்ளத்தை சீர்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பள்ளத்தில் விழுந்த இளைஞரை அப்பகுதி மக்கள், மேசையில் துணி கட்டி மீட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story
