தண்ணீர் தட்டுப்பாட்டால் பரிதவிக்கும் மக்கள், இரவிலும் தண்ணீர்க்காக தேடி அலையும் மக்கள்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரவிலும் பொதுமக்கள் குடிநீர் லாரிகளை தேடி அலைந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் நாளுக்கு

நாள் அதிகரித்து வரும் தண்ணீர் பஞ்சம் காரணமாக பொதுமக்கள் காலி குடங்களுடன் குடிநீரை தேடி அலைந்து வருகின்றனர். பகலில்

குடிநீர் லாரிகளில் தண்ணீர் பிடிக்க பெண்கள் பெரும் சிரமப்பட்டு வரும் நிலையில், வேலைக்கு செல்லும் ஆண்கள் இரவில் குடிநீர் தேடி தூக்கம் கெட்டு அலைவதாக தெரிவித்தனர். பலர் லாரிகள் குடிநீர் பிடிக்கும் இடங்களுக்கு சென்று குடங்களில் தண்ணீரை பிடித்து செல்கின்றனர். மழை பெய்தால் மட்டுமே தற்போதைய தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com