ஜனவரி 14' சென்னை மக்களே ரெடியா இருங்க..

x

"சென்னை சங்கமம்" கலை திருவிழா - ஜனவரி 14ல் தொடக்கம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும், "சென்னை சங்கமம்" கலை திருவிழாவை, முதலமைச்சர் ஸ்டாலின் ஜனவரி 14-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

சென்னை மாநகரின் 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18ம் தேதி வரை நான்கு நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் 50-க்கும் அதிகமான நாட்டுப்புற கலை வடிவங்களை நிகழ்த்த உள்ளனர். இதனுடன் உணவுத் திருவிழா, கைவினைப் பொருள் கண்காட்சி, பாரம்பரிய விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்