சென்னை மக்களே ரெடியா..! விரைவில்... அடியோடு மாற்றம் - வெளியான அப்டேட்

x

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் MRTS வழிதடத்தில் மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர் சித்திக் தெரிவித்தார்.

முதலில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றும், பின்னர் எம்.ஆர்.டி.எஸ் வழிதடத்தில் தண்டவாளத்திற்கு ஏற்ப மெட்ரோ ரயில் பெட்டிகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் சித்திக் குறிப்பிட்டார். மெட்ரோ ரயில் பெட்டிகள் கொள்முதல் செய்து, இயக்கம் தொடங்கும் வரை பழைய மின்சார ரயில் சேவை வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் எம்ஆர்டிஎஸ் ரயில் வழித்தடத்தில் பயண கட்டணத்தை உயர்த்துவது குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். விமான நிலையம், கிளாம்பாக்கம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ஆகிய திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர் சித்திக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்