சென்னையில் பிரபல பரோட்டா கடை ஓனருக்கு அரிவாள் வெட்டு.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரபல பரோட்டா கடையில் , ரவுடிக்கும்பல் மாமுல் கேட்டு உரிமையாளரை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழைய வண்னாரப்பேட்டையை சேர்ந்த சங்கரன் என்பவர், சோலையப்பன் தெருவில் கடந்த 30 வருடங்களாக பரோட்டா கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் இரவில் புகுந்து மாமூல் கேட்ட ரவுடிக் கும்பல், தர மறுத்த சங்கரனை, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், படுகாயமடைந்த சங்கரனை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், மூவரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், சம்பவம் குறித்தான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com