

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில், பழைய இரும்பு கிடங்கில் புகுந்து 7 பேர் கொண்ட கும்பல், வாகனங்களை சேதப்படுத்தியும், தாக்கியும் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். காஜா மொய்தீன் என்பவர் நடத்தி வந்த இரும்புக்கடையில் புகுந்த இந்த கும்பல், ஊழியர்களை மிரட்டி மாமூல் கேட்டுள்ளனர். மாமூல் தர மறுக்கவே அவர்களை தாக்கி விட்டு, தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.