சென்னை பல்லாவரம் அருகே வாகனத்துக்கு வழி விடுவதில் தகராறு - தந்தை மகனை கைது செய்த போலீசார்

சென்னை பல்லாவரம் அருகே மாணவர்களை கத்தியால் குத்திய தந்தை மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பல்லாவரம் அருகே வாகனத்துக்கு வழி விடுவதில் தகராறு - தந்தை மகனை கைது செய்த போலீசார்
Published on

குரோம்பேட்டை, அன்னை வேளாங்கன்னி ஆலயத்தில் நேற்று இரவு திருவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக நாகல்கேணி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நந்தா, பள்ளி மாணவர் விக்னேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.திருவிழா நடைபெற்ற பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கு வழி விடுவதில் மாணவர்களுக்கும் நாகல்கேணியை சேர்ந்த மதன் தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது . அதன் பின்னர் திருவிழா முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களை மதனும், அவரது மகனும் வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளனர். அதில் விக்னேஷிற்கு முதுகிலும், நந்தாவிற்கு தலையிலும் கத்தி குத்து விழுந்துள்ளது. பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சங்கர் நகர் போலீசார், மதன் மற்றும் அவரது மகனை கைது கைது செய்துள்ளனர். மாணவர்களை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com