Chennai Padalathri Seathamman|அம்மனின் தாய் வீட்டிலிருந்து பால்குடம்..பக்தி பரவசத்துடன் வந்த பெண்கள்
Chennai Padalathri Seathamman|அம்மனின் தாய் வீட்டிலிருந்து பால்குடம்..பக்தி பரவசத்துடன் வந்த பெண்கள்
சென்னை அடுத்த கொரட்டூரில் உள்ள பாடலாத்திரி சீயாத்தம்மன் கோயிலில் ஆடி மாதத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், அம்மனின் தாய் வீடான கொரட்டூர் கருமாரியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி, மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். "ஓம் சக்தி பராசக்தி" முழக்கத்துடன் கொரட்டூர் ரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் பெண்கள் பால்குடம் ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். சுமார் 4 கிலோமீட்டர் சுற்றி வந்த பால்குட ஊர்வலம், இறுதியாக பாடலாத்திரி சீயாத்தம்மன் கோயிலில் நிறைவடைந்தது
