Chennai | "அய்யய்யோ.. என் புள்ளைய விட்டுட்டனே " - நடு ரோட்டில் தலையில் அடித்து கத்தி கதறிய பெண்
பைக்கில் வேகமாக சென்றபோது மின்கம்பத்தில் மோதி இளைஞர் பலி
சென்னை கிண்டியில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து
மின்கம்பத்தில் மோதி இளைஞர் உயிரிழந்தார். போரூர், ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர், இரவில் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கத்திப்பாரா மேம்பாலம் அருகே பட்ரோட்டில், முன்னால் சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில், பரமேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அவரது உறவினர்கள், கதறி அழுத காட்சி காண்போரை கலங்கச் செய்தது.
Next Story
