சென்னையில் கார், பைக்கை இனி இப்படி நிறுத்திட்டு போனா அவ்வளவு தான்

சென்னை பள்ளிக்கரணையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்திய வாகனங்களுக்கு, பூட்டு போடப்பட்ட நிலையில் காரின் உரிமையாளர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வேளச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் சாலையின் ஓரத்தில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதையடுத்து போலீஸார் இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு பூட்டு போட்டு, அபராதம் விதித்தனர். மேலும் சாலை விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகளையும் வழங்கி பாராட்டினர்

X

Thanthi TV
www.thanthitv.com