Chennai News | சிறுமியை ஏமாற்றி பாலியல் தொழில் - வெளியான அதிர்ச்சி தகவல்கள்

x

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


சென்னை கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, தாய், தந்தை ஆதரவின்றி தாயின் தோழியான பூங்கொடி அரவணைப்பில் இருந்துள்ளார்...

கிளப் டான்சரான பூங்கொடி, சிறுமிக்கு அன்பும் ஆதரவும் அளித்தாலும் நாள்போக்கில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சித்துள்ளார். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே... ஐ-போன், தேவைக்கு அதிகமான பணம் கொடுத்து ஆசையைத் தூண்டியுள்ளார்.

ஆடம்பரமாக வாழ பாலியல் தொழில் தான் சிறந்த வழி என சிறுமியை நம்ப வைத்து ஏமாற்றி, சினிமா துணை நடிகை நாகம்மா மற்றும் பூங்கொடி ஆகியோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சமூக சேவகர் முருகன் என்பவர் தரகராக செயல்பட்ட துணை நடிகை நாகம்மாவிடம் பேரம் பேசியுள்ளார். இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் சிறுமியை அனுப்பி வைப்பதாக கூறியதுடன், சிறுமியின் புகைப்படம் மற்றும் ஆதார் கார்டை அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கு முருகன் சம்மதம் தெரிவிக்கவே, தனியார் ஓட்டல் ஒன்றில் ரூம் புக் செய்து சிறுமியுடன் நாகம்மா, அஞ்சலி ஆகிய மூவரும் அறையில் காத்திருந்துள்ளனர்.

சம்பவத்தன்று அறையில் காத்திருந்தோருக்கு டுவிஸ்ட் வைத்துள்ளார் முருகன்...

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் முருகன், வாடிக்கையாளர் போல பேசி பாலியல் கும்பலை போலீசாரின் உதவியுடன் கையும் களவுமாக பிடித்துள்ளார்.

பாலியல் கும்பலை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியை பயன்படுத்தி, சினிமா வட்டாரத்தில் உள்ள பலரும் உல்லாசமாக இருந்தது அம்பலமானது.

நடிகரும் உதவி இயக்குநருமான பாரதி கண்ணன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பல சினிமா பிரபலங்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் சிறுமியை இரையாக்கியுள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் உளுந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் என்பவரும் சிறுமியை சிதைத்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு 6 பேர் கம்பி எண்ணும் நிலையில் பாரதி கண்ணன், ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியுடன் உல்லாசமாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்த பட்டியலை போலீசார் தீவிரமாக தயாரித்து வருவதால் பலர் கைதாகும் நிலை உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்