Chennai News | 3 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீச்சு - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னையில் 3 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- மர்ம நபர்களை தேடும் போலீசார்

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் 3 வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவிலம்பாக்கம் காந்தி நரில் வசிக்கும் வினோத், அவருடைய தம்பி கார்த்திக் ஆகியோரின் வீடுகள் மீது 2 தினங்களுக்கு முன், மர்ம நபர்கள் 3 பேர், பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவத்தில், வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. அதே பகுதியில் வசிக்கும் நித்தியானந்தன் என்பவரின் வீட்டின் மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து, போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்