ரூ159 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னை தலைமைச்செயலக வளாகத்தில், 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செயலக வளாகத்தில், 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 159 கோடி ரூபாய் செலவில் இந்த 500 பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கும்பகோணம் கோட்டத்திற்கு 110 பேருந்துகள், மதுரைக்கு 50 பேருந்துகள், கோவை மற்றும் நெல்லைக்கு தலா 30 பேருந்துகள், சேலத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் விழுப்புரத்திற்கு 10 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com