கள்ளக்காதல் விவகாரம் : கணவன் கொலை , மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை, மனைவியே கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கள்ளக்காதல் விவகாரம் : கணவன் கொலை , மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது
Published on

திருநின்றவூர் ராஜங்குப்பம் கூவம் ஆற்றில், கடந்த 16ஆம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில், சுரேஷ் ​​என்ற செங்கல் சூளை உரிமையாளர், போலீசாரை நேரில் சந்தித்தார். அப்போது, தனது சூளையில் பணிபுரியும் மணிகண்டன், பூமிநாதன், ஐயனார் ஆகியோர் கூவத்தில் சடலமாக கிடந்த நபரை, தாங்கள் தான் கொலை செய்ததாக போதையில் உளறி வருவதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த மணிகண்டனுக்கும், அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி செல்விக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையறிந்த குமார், 3 குழந்தைகள் மற்றும் மனைவியை அழைத்துக் கொண்டு கூடுவாஞ்சேரிக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி, கணவர் குமாருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த செல்வி, மணிகண்டனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். தனது நண்பர்களுடன் அங்கு சென்ற மணிகண்டன், குமாரை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்து உடலை, திருநின்றவூர் கூவம் ஆற்றில் அரைகுறையாக புதைத்து விட்டு சென்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, செல்வியையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com