வீட்டில் பங்கு தராத அண்ணனுக்கு கத்திக்குத்து : பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது தம்பி வெறிச்செயல்

சென்னை திருவொற்றியூரில் வீட்டில் பங்கு தராத அண்ணனை கத்தியால் குத்திய தம்பி விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.
வீட்டில் பங்கு தராத அண்ணனுக்கு கத்திக்குத்து : பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது தம்பி வெறிச்செயல்
Published on
சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். வழக்கறிஞராக பயிற்சி மேற்கொண்டு வரும் இவர், வீட்டில் பங்கு கேட்ட தனது தம்பி விக்னேஷை சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளார். இதனால், குப்பைகளை பொறுக்கி, சாலையில் விக்னேஷ் தங்கி காலத்தை கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மணிகண்டன் தனது மகனின் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு ஆத்திரமடைந்த விக்னேஷ், மணிகண்டனின் முகம் மற்றும் தலையில் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு, மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். இதையடுத்து, விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com