14 வயது சிறுவன் உயிரை பறித்த அலட்சியம் : வாய் பேச முடியாத நண்பனின் கடைசி நேர போராட்டம்

சென்னையில் மின் கம்பியை மிதித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
14 வயது சிறுவன் உயிரை பறித்த அலட்சியம் : வாய் பேச முடியாத நண்பனின் கடைசி நேர போராட்டம்
Published on

சென்னை முகலிவாக்கதில் மின்கம்பியை மிதித்து 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

நண்பனுடன் இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு சென்ற சிறுவன் தீனாவுக்கு தெரியாது, அது தான் அவனது கடைசி பயணம் என்று. மழைநீரில் மறைந்திருந்த மின் கம்பி, தீனாவின் உயிரை பறித்தது. தீனா கீழே விழுந்ததும், அவருடன் வந்த நண்பர், செய்வதறியாமல் தவித்தார். வாய் பேச முடியாத அவரால், நண்பனை காப்பாற்ற யாராவது வாங்க என கூச்சலிட முடியவில்லை. இருந்தாலும் விட முயற்சியுடன் போராடிய அவர், அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகளை சைகையில் அழைத்தார். ஆனால், அந்த வழியே சென்ற யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.

மின் விபத்தில் சிக்கிய தீனா... அவரை காப்பாற்ற நண்பர் நடத்திய போராட்டம்.... நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் மகனை பறிகொடுத்த பெற்றோர் மாங்காடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில், மாநகராட்சியின் 12வது மண்டலம் 156வது வார்டுக்கு உட்பட்ட மாநகராட்சி மின்வாரிய அதிகாரிகள் துரை, செந்தில் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com