சாலையைக் கடக்க முயன்ற குரங்கு-வாகனம் மோதி பரிதாப பலி

சாலையைக் கடக்க முயன்ற குரங்கு-வாகனம் மோதி பரிதாப பலி
Published on

சென்னை விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி குரங்கு ஒன்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் எதிரில் 5 குரங்குகள் சுற்றி திரிந்தன. ஒரு குரங்கு திடிரென சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தது. அவ்வழியே சென்ற வாகன ஓட்டி குரங்கிற்கு முதலுதவி அளித்து எப்படியேனும் காப்பாற்றிட போராடினார். ஆனால் குரங்கு உயிர் பிழைக்கவில்லை... இறந்த குரங்கு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com