

சென்னை கோயம்பேடு சிக்னல் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தடுத்த போக்குவரத்து போலீசாரிடம் சசிகுமார் என்ற ராணுவ வீரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அபராதம் விதிக்க முயன்றதால் ஆத்திரமுற்ற அவர், போலீசாரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் சசிகுமார் மன்னிப்பு கேட்டதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.