சென்னையில் புதிய மெட்ரோ ரயில் நிலையம் - ரியல் பிரமாண்டம்.. வெளியான முக்கிய தகவல்
சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் நிலையமாக பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் உருவாகிறது. தரையில் இருந்து 20 மீட்டர் ஆழத்தில், 320 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் இந்த மெட்ரோ ரயில் நிலையம், 17 ஆயிரம் சதுர அடியில் சுரங்க வணிக வளாகத்துடன், ஒரே நேரத்தில் 5,000 பேர் பயன்படுத்தும் வகையில் அமைகிறது. அதிகளவில் மக்கள் கூடும் இடம் என்பதால் சென்னையில் பயன்பாட்டில் உள்ள மற்றும் எதிர்கால ரயில் நிலையங்களிலேயே அதிக நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும் வழிகள் இங்கு அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலையம் கட்டி முடித்த பின்பு இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையில், பனகல் பார்க் சீரமைக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Next Story
