சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 6.08 கோடி பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 6 கோடியே 8 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 6.08 கோடி பேர் பயணம்
Published on

மெட்ரோ ரயில் நிறுவனம் தனது சேவையை கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி சென்னையில் துவக்கியது. சேவை தொடங்கிய முதல் நாளில் இருந்து 2018 டிசம்பர் 31ஆம் தேதி வரை 2 கோடியே 80 லட்சத்து 52 ஆயிரத்து 357 பேர் பயணம் செய்துள்ளனர். இதேபோல் கடந்த 2019ல் மட்டும் 3 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 628 பேர் பயணம் செய்துள்ளனர். இதன்படி கடந்த 2015 ஜூன் முதல் 2019 டிசம்பர் வரை 6 கோடியே 8 லட்சத்து 65 ஆயிரத்து 985 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com