"கோவை, நீலகிரி, தேனியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"கோவை, நீலகிரி, தேனியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை நீலகிரி தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 19 முதல் 23 ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியிலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com