இளம் பெண்கள் துறவறம் செல்லும் நிகழ்ச்சி - ஒரே நாளில் 23 பேர் துறவறம் சென்றுள்ளனர்

சென்னை மாதவரத்தில் ஜெயின் சமூகத்தினர், துறவறம் மேற்கொண்டு தீட்சை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இளம் பெண்கள் துறவறம் செல்லும் நிகழ்ச்சி - ஒரே நாளில் 23 பேர் துறவறம் சென்றுள்ளனர்
Published on

ஜெயின் சமுகத்தின் மதகுருவான ஆச்சாரிய ஸ்ரீ மஹாஸ்ரமன் சென்னையில் தங்கி ஜெயின் சமூகத்தினருக்கு ஆசி வழங்கி வருகிறார். இதில் சென்னை உட்பட வெளி மாவட்டங்களை சேர்ந்த 20 பெண்கள், 11 வயது சிறுவன் உட்பட 23 பேர் துறவறம் மேற்கொண்டனர். துறவறம் மேற்கொள்ளும் பெண்களுக்கு விதம் விதமான ஆடை, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சாரட் வண்டியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மொட்டையடித்து வெள்ளை ஆடை அணிவித்து, மத குருமார்களுடன் துறவறத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதகுருமார் அவர்களுக்கு தீட்சை வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com