"பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை அப்புறப்படுத்துவது எப்படி?" - சென்னை மாநகராட்சி விளக்கம்

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
"பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை அப்புறப்படுத்துவது எப்படி?" - சென்னை மாநகராட்சி விளக்கம்
Published on

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களில் கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது என்பதால் அதனை பொது இடங்கள், வீடுகள் மற்றும் திறந்த குப்பை தொட்டிகளில் பொறுப்பின்றி போடக்கூடாது என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

பயன்படுத்திய முக கவசங்களை அப்புறப்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டியது கட்டாயம் என்றும், துணியாலான முக கவசங்களை ஒவ்வொரு முறையும் துவைத்து சூரிய ஒளியில் காயவைக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பயன்படுத்திய N 95 முக கவசத்தை காற்று உட்புக முடியாத பைகளில் போட்டு அப்புறப்படுத்த வேண்டியது கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சாதாரண முகக்கவசத்தை உட்புறமாக மடித்து, காகிதத்தில் சுற்றி அப்புறப்படுத்த வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com