Chennai Marina | பேருந்து ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு - பேருந்து மோதி 2 பேர் படுகாயம்

x

சென்னை மெரினா கடற்கரை சாலையில் மாநகர பேருந்து, சாலையில் நின்றிருந்த 2 ஆட்டோக்கள் மேல் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்து ஓட்டிக் கொண்டு இருந்த பேருந்தின் ஓட்டுநரான மோகன் என்பவருக்கு அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், வலிப்பு ஏற்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர், விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் 2 பேர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்தில் பேருந்தில் சிக்கி சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 ஆட்டோக்களும் அப்பளம் போல நொறுங்கின.


Next Story

மேலும் செய்திகள்