Chennai Marina Beach Theft | Police | மெரினா பீச்சில் தூங்கிய நபருக்கு பேரதிர்ச்சி

x

சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் தூங்கிக் கொண்டிருந்த நபரை தாக்கி, பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சநல்லூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சென்னை மாநகராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி, மெரினா கடற்கரை மணற்பரப்பில் தூங்கிக் கொண்டு இருந்தபோது, அவரை 2 மர்மநபர்கள் தாக்கி பணம் கேட்டு மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,200-ஐ பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்