chennai | Mall | Lift | சென்னை மாலில் நடந்த விபத்தில் திடீர் திருப்பம்.. மனைவி சொன்ன ஷாக்கிங் தகவல்
பிரபல திரையங்கத்தில் பராமறிப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராலிக் லிப்ட் பழுதானதில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ராயப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வருகிறது மாலில் உள்ள திரையரங்கில் பராமறிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார், 25அடி உயர வெள்ளி திரை அருகே ஹைட்ராலிக் லிப்டில் பணி செய்து கொண்டிருந்த போது லிப்ட் பழுதாகி வேகமாக மேற்கூரையில் இடித்தது, இதில் ராஜேஷ்சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இது குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அருகே நடைபெற்று வருகிறது. பெரம்பூரைச்சேஎ இங்கு 3 வது மாடியில் தனியார் சினிமா தியேட்டர்கள் உள்ளது. இதில் 4 வது ஸ்கிரீனில் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்த என்ஜினியர் ராஜேஷ் என்பவர் இங்கு 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். 4 ஸ்கிரீனில் ஹைட்ராலிக் லிப்ட் பழுதானதால் ராஜேஷ் மற்றும் மூத்த என்ஜினியர் தனசேகர், தொழில்நுட்ப ஊழியர்கள் முருகன், டேவிட் ஆகியோர் இன்று அதிகாலையில் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது சுமார் 25 மீட்டர் உயரத்தில் நின்று கொண்டு ப்ரொஜெக்டர் சுத்தம் செய்வதற்கு லிப்டில் இறக்கி வைத்தனர். திடீரென்று லிப்ட் தானாக இயங்கி மேலே இருந்த மேற்கூரையில் இடித்தது. இதில் என்ஜினியர் ராஜேஷூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து அண்ணாசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன ராஜேஷ் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு திருவிகநகர் 74 வது வட்ட பொறுப்பாளர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ராஜேஷ் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். வேலை பார்க்க சென்ற இடத்தில் லிப்ட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தனது கணவர் உயிரிழந்துவிட்டதாகவும், என்ன நடந்தது என சரியாக தெரியவில்லை எனவும் கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் உயிரிழந்த ராஜேஷின் மனைவி கஜலட்சுமி கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து ராஜேஷின் மனைவி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் இயந்திரங்களை அலட்சியமாக பயன்படுத்துதல், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சினிமா தியேட்டர் பணி பொறுப்பாளர் முகப்பேரைச் சேர்ந்த பிரபாகரன், மூத்த என்ஜினியரான திருவான்மியூரைச் சேர்ந்த தனசேகரன் ஆகியோரை பிடித்து அண்ணாசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
