சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் - பரபரப்பு

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கடந்த மே மாதம் 27ம் தேதி மத்திய கைலாஷ் சிக்னல் அருகே 8 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனையடுத்து சிமெண்ட் கலவை கொண்டு அது சரி செய்யப்பட்டது. இரண்டே வாரங்களில் அதே பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. நள்ளிரவில் போக்குவரத்து குறைவாக இருந்த காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com