பக்கத்து வீட்டுக்கு சென்று வருவதற்குள்... மொத்தத்தையும் வழித்து அள்ளிய மர்ம கும்பல் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னை அடுத்த மாதவரம் சீனிவாசன் நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் ஷாஜகான் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, கதவு, பீரோ உடைந்து கிடந்ததுடன், அதில் இருந்த 100 சவரன், நகை, பத்தாயிரம் பணம் மற்றும் வீட்டில் நிறுத்தி இருந்த ஒரு காரையும் மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த காவல் அதிகாரிகள் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்ததுடன், பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர். பக்கத்து வீட்டுக்கு சென்று திரும்புவதற்குள் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்