Chennai | Lovers Issue | 2 இளம்பெண்கள் சேர்ந்து இளைஞரை விரட்டி விரட்டி.. சென்னையில் பகீர்
நடுரோட்டில் 2 இளம்பெண்கள் சேர்ந்து இளைஞரை விரட்டி விரட்டி.. சென்னையில் கதிகலங்க விட்ட காட்சி
காதல் விவகாரம்? - இளைஞரை சரமாரியாக தாக்கிய 2 இளம்பெண்கள்
சென்னை கே.கே நகரில் காதல் விவகாரத்தில் ஒரு இளைஞரை, 2 இளம்பெண்கள் விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியான 22 வயது இளம்பெண் ஒருவரும், கார்த்திக்கேயன் என்ற இந்த இளைஞரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில், இளைஞர் சட்டக்கல்லூரி மாணவி உடனான தொடர்பை திடீரென துண்டித்து விட்டு, மாணவியின் வீட்டுக்கு சென்று சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞரை வெளியில் கண்ட இடத்தில், தனது சகோதரியுடன் இணைந்து சட்டக்கல்லூரி மாணவி வாக்குவாதம் செய்து தாக்கியதாக தெரிய வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
