Chennai | loveissue | `Break up' ஆன காதல் - `Patch up' ஆக வற்புறுத்தி கொ*ல மிரட்டல் விடுத்த இளைஞர்

x

சென்னையில் காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த சினிமா துணை ஏஜென்டை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல் பகுதியை சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவி ஒருவர், குடும்ப வறுமை காரணமாக சினிமாவில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அங்கிருந்த 26 வயதான துணை ஏஜென்ட் ஒருவர், மாணவியுடன் நட்புடன் பழகி வந்தார். பின்னர் இருவரும் காதலித்த நிலையில், மாணவி தனது சூழல் காரணமாக காதலை தொடர மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து மாணவியை காதலிக்க வற்புறுத்தி அவரது குடும்பத்தினரை கொலை செய்துவிடுவதாக இளைஞர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் தற்போது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்