சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி | Chennai | Thanthi TV

சென்னை கடற்கரை வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை, செவ்வாய் கிழமை நாளை முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே மேற்கொள்ளப்பட்டு வந்த நான்காவது வழித்தட பணிகள் காரணமாக கடந்தாண்டு ஆகஸ்ட் 27ம் தேதி முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையான பறக்கும் ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே இயக்கப்பட்டது. இந்நிலையில், பணிகள் நிறைவு பெற்ற நிலையில் செவ்வாய் கிழமை முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிப்பானது வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், இரு மார்க்கத்திலும் நாள் ஒன்றுக்கு தலா 45 ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

Thanthi TV
www.thanthitv.com