திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை : பெற்றோர் அளித்த புகாரால் கணவரிடம் விசாரணை

சென்னை அடுத்த குன்றத்தூர், எம்.ஜி.ஆர். நகரில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன கோமதி என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை : பெற்றோர் அளித்த புகாரால் கணவரிடம் விசாரணை
Published on
சென்னை அடுத்த குன்றத்தூர், எம்.ஜி.ஆர். நகரில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன கோமதி என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று, வீட்டிற்கு வந்த கணவர் பொன்ராஜ், தூக்கில் தொங்கிய மனைவியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை தொடங்கினர். அதில், பொன்ராஜிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், இருவரிடையே தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும், மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கோமதியின், பெற்றோர் அளித்த புகாரால், பொன்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com