உணவில் மயக்க மருந்து கொடுத்து திருட்டு : வீட்டில் வேலை செய்த நேபாள இளைஞன் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை, பணம் திருடிய நேபாளத்தை சேர்ந்த பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
உணவில் மயக்க மருந்து கொடுத்து திருட்டு : வீட்டில் வேலை செய்த நேபாள இளைஞன் கைது
Published on

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை, பணம் திருடிய நேபாளத்தை சேர்ந்த பணியாளரை போலீசார் கைது செய்தனர். சீனிவாசலு என்பவரது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சுஜன் என்ற இளைஞர் 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சீனிவாசலு வீட்டில் இரவு உணவு தயார் செய்து, அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட வீட்டில் இருந்த அனைவரும் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து வீட்டில் இருந்த 15 சவரன் நகை, 35 ஆயிரம் ரூபாய் பணத்தை சுஜன் திருடிச் சென்றார். இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் சிக்னல் உதவியுடன் 6 மணி நேரத்தில் சுஜனை கைது செய்தனர்.அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com