காசிமேடு படகு பழுதுபார்க்கும் இடத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சிறுமி...

சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 10 வயது மகள் கீர்த்தனா நேற்று மாலை கடற்கரை அருகில் நடந்த கோவில் பூஜையை பார்க்க சென்றுள்ளார்.
காசிமேடு படகு பழுதுபார்க்கும் இடத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சிறுமி...
Published on
சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 10 வயது மகள் கீர்த்தனா நேற்று மாலை கடற்கரை அருகில் நடந்த கோவில் பூஜையை பார்க்க சென்றுள்ளார். இரவு வெகுநேரம் ஆகியும் கீர்த்தனா வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர் கடற்கரை முழுவதும் தேடியுள்ளனர். கீர்த்தனா கிடைக்காத நிலையில், போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கீர்த்தனாவை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், காசிமேடு விசைப்படகு பழுது பார்க்கும் இடத்தில் அவரது உடலை கண்டெடுத்தனர். கீர்த்தனாவின் முகத்தில் காயங்கள் இருப்பதால், அவர் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com