சென்னையில் மகாராஜனை கைது செய்த போது அவரது உறவினர்களும், நண்பர்களும் கேரளா போலீசாருடன் கைலப்பில் ஈடுபட்டதால் அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதுதொடர்பாக 30 பேர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கேரளா நீதிமன்றத்தில் மகாராஜனை போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது, குறிப்பிட்ட நேரத்தில் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால், மகாராஜனுக்கு ஜாமின் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடும் போராட்டத்திற்கு இடையே பிடிபட்ட மகாராஜனை நீதிமன்றம் ஜாமினில் விடுவித்ததால் கேரள போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.