நகைக்கடை ஊழியர் தற்கொலை-உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

நகைக்கடை ஊழியர் தற்கொலை-உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
Published on

சென்னை சவுகார்பேட்டையில் சொந்தமாக நகைப்பட்டறை நடத்தி வருபவர் ஸ்மித் பாலாஜி. இவரது நகைப்பட்டறையில் சைபுல் ரபீக் உட்பட நான்கு பேர் வேலை பார்த்து வந்துள்ளனர்.இந்த நிலையில் தனது பட்டறையில் வேலை பார்த்த சைபுல் ரபீக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார் ஸ்மித் பாலாஜி. சைபுல் ரபீக் உடலில் காயங்கள் இருந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சைபுல் ரபீக் நகைப்பட்டறையில் இருந்து ஒரு கிலோ வரை நகைகளைத் திருடியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சைபுல் ரபீக்கை தனியறையில் கட்டி வைத்து கிரிக்கெட் மட்டையால் சரமாரியாகத் தாக்கி இருக்கிறார். இதன் பின்னர் திருடிய நகைகளை ஒரு மாதத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சைபுல் ரபீக்கை தற்கொலைக்குத் தூண்டியதாக நகைக்கடை பட்டறை உரிமையாளர் ஸ்மித் பாலாஜி உட்பட நான்கு பேரைக் கைது செய்தனர்.சைபுல் ரபீக்கின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவைப் பொறுத்து வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரியவரும் என்கின்றனர் போலீசார்.

X

Thanthi TV
www.thanthitv.com