“சென்னையில் இருந்துகொண்டு அறிக்கை விடுவது வெகு சுலபம்" -மத்திய அமைச்சர் கடும் தாக்கு..

x

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாக திமுக கூறுவதை ஏற்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஜெய்சங்கர், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸும் திமுகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார்.

கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 180 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆயிரத்து 175 மீனவர்களின் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறினார்.

முக்கியத்துவம் இல்லாத சிறிய தீவான கச்சத்தீவை விட்டுக் கொடுப்பதில் தயக்கம் இல்லை என முன்னாள் பிரதமர் நேரு தெரிவித்ததாக குற்றம்சாட்டிய ஜெய்சங்கர், கச்சத்தீவு என்பது சிறிய பாறைதான் என முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூறியதாகப் பேசினார்.

கச்சத்தீவு குறித்து அனைத்து தகவல்களும் மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டு ஆலோசனை நடத்திய பிறகே இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது எனத் தெரிவித்துள்ள ஜெய்சங்கர்,,,

கச்சத்தீவை யார் தாரைவார்த்தார்களோ அந்த இரண்டு கட்சிகளுமே இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்