Chennai | IWN | பெண்கள் முன்னேற்றம் - தமிழ்நாட்டின் தாரகை 2026 மாநாடு

சென்னையில் 200 க்கும் மேற்பட்ட தலைவர்களை ஒன்றிணைத்து பெண்களின் தலைமையும் முன்னேற்றத்தையும் முன்னிறுத்திய சி.ஐ.ஐ IWN சார்பில் (Indian women network) தமிழ்நாட்டின் தாரகை 2026 மாநாடு நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. பெண்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, தொழில் முனைவு மற்றும் பணியிட பங்கேற்பு போன்ற முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில், சி.ஐ.ஐ IWN தமிழ்நாட்டின் நிர்வாகிகள் மற்றும் துணை தலைவர் Cavin kare நிறுவனத்தின் இயக்குநர் அமுதவல்லி ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டின் முக்கிய அம்சமாக Women Shaping Tamilnadu @2030 என்ற உரையாடலும் நடைபெற்றது. பெண்கள் எந்த துறையில் இருந்தாலும் அவர்களை இன்னும் உறுதிப்படுத்தவும், முன்னேற்றிக் கொள்ள இது ஒரு சிறந்த தளமாக அமையும் என Cavin kare நிறுவனத்தின் இயக்குநர் அமுதவல்லி ரங்கநாதன் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com