``பின்னால் நின்று Bad டச்.. உடல் அளவை கேட்டு டார்ச்சர்'' - IT கம்பெனி பாஸ்க்கு சொருகப்பட்ட ஆப்பு

x

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும், விரும்பத்தகாத சொல் கூட பாலியல் துன்புறுத்தல் தான் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளது.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்போடு இந்தக் காலத்தில் பெண்களுக்கு வேலையும் இன்றியமையாத ஒன்றாகி விட்டது...

பெற்றோரை, பிள்ளைகளை கவனிக்க வேண்டுமே என்ற குடும்பப் பொறுப்பைத் தோளில் சுமந்து...வேலைக்கு வரும் பெண்களுக்கு பணி செய்யும் இடத்தில் பாதுகாப்புள்ளதா? என்றால், பல இடங்களில் இல்லை என்பதே கசப்பான உண்மை...

அப்படி அப்பாவிப் பெண்களின் சூழலைப் பயன்படுத்தி பாலியல் தொல்லையளிக்கும் காமக் கொடூரர்களுக்கு பொட்டில் அறைந்தார்போல், அறிவுறுத்தியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்...

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிய மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிராக அங்கு பணிபுரியும் 3 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர்...

அந்த அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கக்கூடாது என விசாகா குழு பரிந்துரைத்த நிலையில்,

இதை எதிர்த்து அந்த அதிகாரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை தொழிலாளர் நல நீதிமன்றம், அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது...

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது...

அப்போது, அந்நிறுவனம் தரப்பில், குற்றம் சாட்டப்பட்ட நபர் “பெண்கள் வேலை பார்க்கும் மேஜைகளுக்கு பின்னால் நின்று கொண்டு அவர்களைத் தொடுவதுடன்,

கை குலுக்க வற்புறுத்தி உடை அளவைக் கேட்டு தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது...

சம்பந்தப்பட்ட அதிகாரி தரப்பில், “பாலியல் துன்புறுத்தல் செய்யும் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும், உயர் அதிகாரி என்ற முறையில், அப்பெண்களின் இருக்கைக்கு பின் நின்று கண்காணித்ததாகவும்“ வாதிடப்பட்டது...

அதிகாரி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் செயல் அல்லது சொல்லும் கூட, சட்டப்படி பாலியல் துன்புறுத்தல் தான் என்று தெளிவு படுத்தியுள்ளார்...

தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி,

விசாகா குழு பரிந்துரைகள் செல்லும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்...

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம், “பாதிக்கப்பட்ட பெண்கள், ஒரு நடத்தையை எப்படி உணர்கிறார்கள் என்பதை முதன்மைப்படுத்துகிறதே தவிர...

துன்புறுத்துபவர்களின் நோக்கங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை“ எனவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்