பெருங்களத்தூரை சேர்ந்த சுந்தரின்சகோதரி, பிரபல தனியார் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது சகோதரி உடன் வேலை பார்க்கும் பெண் எனக் கூறி, சுமித்ரா என்பவர் அறிமுகமாகியுள்ளார். சிங்கப்பூரில் தனது கணவர் தொழிலதிபராக இருப்பதாகவும், இந்தியாவிலிருந்து தானியங்களில் ஏற்றுமதி செய்யும் தொழிலை தாங்கள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.இதை நம்பி, சுந்தர் 8 லட்ச ரூபாய் வரை பண பரிவர்த்தனை செயலி மூலம் சுமித்ராவுக்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாட்களாக பணத்தை திருப்பி தராததால், சந்தேகமடைந்த சுந்தர்,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் சுமித்ரா தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் இதேபோன்று 50 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.