விமானத்தில் ஹஜ் பயணிக்கு மூச்சுத்திணறல் - 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்ட விமானம்

ஹஜ் பயணிகளுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் ஓடுபாதை வரை சென்ற நிலையில் மீண்டும் நடைமேடைக்கு திரும்பி வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தில் ஹஜ் பயணிக்கு மூச்சுத்திணறல் - 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்ட விமானம்
Published on
சென்னையில், ஹஜ் பயணிகளுடன் புறப்பட்ட சிறப்பு விமானம், ஓடுபாதை வரை சென்ற நிலையில் மீண்டும் நடைமேடைக்கு திரும்பி வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. 423 பேருடன் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் புறப்பட்ட நிலையில், திருப்பூரை சேர்ந்த அப்துல் ஜலீல் என்பவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே இதுகுறித்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமான நிலைய மருத்தவர்கள் விரைந்து வந்து அப்துல் ஜலீலுக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அப்துல் ஜலீல் மற்றும் அவரது மனைவி இருவரும் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பின் 421 பயணிகளுடன் விமானம், ஜித்தா நகருக்கு புறப்பட்டு சென்றது.
X

Thanthi TV
www.thanthitv.com