சென்னையில் சொந்த மகளிடம் அத்துமீறிய தந்தை... "சாகும் வரை.." - நீதிமன்றம் கொடுத்த சரியான தண்டனை

சென்னையில் சொந்த மகளிடம் அத்துமீறிய தந்தை... "சாகும் வரை.." - நீதிமன்றம் கொடுத்த சரியான தண்டனை
Published on

சென்னையில் 13 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 3 ஆண்டுகளாக தனது தங்கைக்கு, தந்தை பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக அண்ணன் அளித்த புகாரின் பேரில் தந்தைக்கு எதிராக போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com