"சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு" - மாணவியின் தந்தை

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா கடந்த ஒரு மாதமாக மனவேதனையுடன் காணப்பட்டதாக அவரது தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்.
"சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு" - மாணவியின் தந்தை
Published on

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா கடந்த ஒரு மாதமாக மனவேதனையுடன் காணப்பட்டதாக அவரது தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொள்ளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாத்திமா கடந்த ஒரு மாதமாக தாயாரிடம் பல புகார்கள் தெரிவித்து வந்துள்ளதாக கூறியுள்ளார். பாத்திமாவின் மனம் புண்படும் படி ஏதோ சம்பவங்கள் நிகழ்ந்ததை தாம் உணர முடிந்ததாக குறிப்பிட்ட லத்தீப், தேர்வில் INTERNAL மதிப்பெண்கள் மிகவும் குறைவாக ஆசிரியர்கள் வழங்கியதாகவும் கூறியுள்ளார். இது குறித்து பாத்தீமா மேல்முறையீடு செய்த போது துறைத் தலைவர் கூடுதலாக 5 மதிப்பெண்களை வழங்கலாம் என்று கூறியதாகவும், ஆனால் தற்போது இவ்வாறு நிகழ்ந்துவிட்டதாகவும் தந்தை லத்தீப் கூறியுள்ளார். சென்னை ஐஐடிக்கு படிப்பதற்காக அனுப்பியது தவறாகி விட்டதோ என தாம் எண்ணியதாகவும் தந்தை லத்தீப் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com