சென்னை ஐஐடி மாணவி மரணம் : சிபிஐ விசாரணை கோரி வழக்கு

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
சென்னை ஐஐடி மாணவி மரணம் : சிபிஐ விசாரணை கோரி வழக்கு
Published on
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. கடந்த 2018 ம் ஆண்டு முதல் சென்னை ஐஐடி யில் 5 மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com